சங்ககாலத்தில் பல புலவர்களாலும்,கவிதிறம் படைத்த வேந்தர்களாலும் பல்வேறு காலகட்டங்களில் ஏழுதப்பட்ட தனிப்பாடல்களின் தொகுப்பு.
பா,திணை ஆகியவற்றால் ஒழுங்குமுறையுடன் பாடல்கள் பிரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.
எட்டுத்தொகை நூல்களில் உள்ள பலபாடல்களில் எழுதியப்புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. அகத்தைப்பற்றிய ஐந்து நூல்களையும் புறத்தை பற்றிய இரண்டு பாடல்களையும் அகம் புறம் சார்ந்த ஒரு நூலையும் எட்டுத்தொகை இலக்கியம் தன்னனகத்தே பெற்றுள்ளது.
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை”
எட்டுத்தொகை நூல்கள்:
எட்டுத்தொகையில் அகம் சார்ந்த நூல்கள்:
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு.
எட்டுத்தொகையில் புறம் சார்ந்த நூல்கள்:
புறநானூறு,பதிற்றுப்பத்து.
எட்டுத்தொகையில் அகமும் புறமும் சார்ந்த நூல்: பரிபாடல்.
அகப்பொருள் குறித்து வரும் அனைத்து நூல்களின் பாடல்களும் முழுமையாகக் கிடைத்துள்ளன.
புறப்பொருள் குறித்து வரும் பாடல்களில் சிலப் பாடல்கள் அழிந்தும், பல பாடல்கள் சிதைந்தும், ஒருசிலப் பாடல்கள் பாடபேதங்களுடனும் காணப்படுகின்றன.
பா வகையினால் பெயர் பெற்ற எட்டுத்தொகை நூல்கள்:
கலித்தொகை கலிப்பா
பரிபாடல் பரிபாடல்
திணையினால் பெயர் பெற்ற எட்டுத்தொகை நூல்கள்:
அகநானூறு
புறநானூறு
அடிவரையறையினால் பெயர் பெற்ற எட்டுத்தொகை நூல்கள்:
குறுந்தொகை
ஐங்குறுநூறு
கலித்தொகை,பரிபாடல் தவிர்த்து பிற எட்டுத்தொகை நூல்கள் ஆசிரியப்பாவினால் படைக்கப்பட்டுள்ளன.
தொகைநூல் | தொகுத்தவர் | தொகுப்பித்தவர் | அடிவரையறை, திணை,பா வகை |
மதுரை உப்புரிகுடி கிழான் மகனாவான் உருத்திர சன்மன் | பாண்டியன் உக்கிரப் பெருவழுதி | பாடலடி 13 முதல் 31 | |
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் | யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையார் | ஒவ்வொரு திணைக்கும் 100 பாடல், 5 திணைக்கும் 500 பாடல் | |
நல்லந்துவனார் | புலப்படவில்லை | 5 திணைக்கும் கலிப்பாவால் அமைந்த பாடல்கள் உள்ளன | |
பூரிக்கோ | பூரிக்கோ | பாடலடி 3 முதல் 8 | |
- | பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி | பாடலடி 9 முதல் 12 | |
தெரியவில்லை | தெரியவில்லை | அரசருக்கு 10 என்ற முறையில் 10 அரசர்கள்மீது 10 புலவர்கள் பாடிய 100 பாடல்கள், (முதல் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கவில்லை | |
பரிபாடல் (பரிபாட்டு) | தெரியவில்லை | தெரியவில்லை | திருமால் மீது 8 பாடல், செவ்வேள் மீது 31, காடுகாள்(கொற்றவை) மிது 1, வையை மீது 26, மதுரை மீது 4 - என்று 70 பாடல்கள் இருந்தன. |
புறநானூறு (புறம்) | தெரியவில்லை | தெரியவில்லை | புறத்திணைப் பாடல்கள் |
No comments:
Post a Comment