Tuesday, 15 March 2011

எட்டுத்தொகை

சங்ககாலத்தில்  பல புலவர்களாலும்,கவிதிறம் படைத்த வேந்தர்களாலும் பல்வேறு காலகட்டங்களில் ஏழுதப்பட்ட தனிப்பாடல்களின் தொகுப்பு.
பா,திணை ஆகியவற்றால் ஒழுங்குமுறையுடன் பாடல்கள் பிரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.
எட்டுத்தொகை நூல்களில் உள்ள பலபாடல்களில் எழுதியப்புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. அகத்தைப்பற்றிய ஐந்து நூல்களையும் புறத்தை பற்றிய இரண்டு பாடல்களையும் அகம் புறம் சார்ந்த ஒரு நூலையும் எட்டுத்தொகை இலக்கியம் தன்னனகத்தே பெற்றுள்ளது.

எட்டுத்தொகை நூல்களைப் பற்றி குறிப்பிடும் தொன்மையான  வெண்பா  பாடல்
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
 கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை

எட்டுத்தொகை நூல்கள்:
எட்டுத்தொகையில் அகம் சார்ந்த நூல்கள்:
 நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு.
எட்டுத்தொகையில் புறம் சார்ந்த நூல்கள்:  
புறநானூறு,பதிற்றுப்பத்து.
எட்டுத்தொகையில் அகமும் புறமும் சார்ந்த நூல்:         பரிபாடல்.
அகப்பொருள் குறித்து வரும் அனைத்து நூல்களின் பாடல்களும் முழுமையாகக் கிடைத்துள்ளன.
புறப்பொருள் குறித்து வரும்  பாடல்களில் சிலப் பாடல்கள் அழிந்தும், பல பாடல்கள் சிதைந்தும், ஒருசிலப் பாடல்கள் பாடபேதங்களுடனும்  காணப்படுகின்றன.
பா வகையினால் பெயர் பெற்ற எட்டுத்தொகை நூல்கள்:
கலித்தொகை      கலிப்பா
பரிபாடல்          பரிபாடல்
திணையினால் பெயர் பெற்ற எட்டுத்தொகை நூல்கள்:
அகநானூறு
புறநானூறு

அடிவரையறையினால் பெயர் பெற்ற எட்டுத்தொகை நூல்கள்:
குறுந்தொகை
ஐங்குறுநூறு
கலித்தொகை,பரிபாடல் தவிர்த்து பிற எட்டுத்தொகை நூல்கள் ஆசிரியப்பாவினால் படைக்கப்பட்டுள்ளன.

தொகைநூல்
தொகுத்தவர்
தொகுப்பித்தவர்
அடிவரையறை,
திணை,பா வகை
அகநானூறு(அகம்), (அகப்பாட்டு), (நெடுந்தொகை)
மதுரை உப்புரிகுடி கிழான் மகனாவான் உருத்திர சன்மன்
பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
பாடலடி 13 முதல் 31
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையார்
ஒவ்வொரு திணைக்கும் 100 பாடல், 5 திணைக்கும் 500 பாடல்
நல்லந்துவனார்
புலப்படவில்லை
5 திணைக்கும் கலிப்பாவால் அமைந்த பாடல்கள் உள்ளன
பூரிக்கோ
பூரிக்கோ
பாடலடி 3 முதல் 8
-
பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
பாடலடி 9 முதல் 12
தெரியவில்லை
தெரியவில்லை
அரசருக்கு 10 என்ற முறையில் 10 அரசர்கள்மீது 10 புலவர்கள் பாடிய 100 பாடல்கள், (முதல் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கவில்லை
பரிபாடல் (பரிபாட்டு)
தெரியவில்லை
தெரியவில்லை
திருமால் மீது 8 பாடல், செவ்வேள் மீது 31, காடுகாள்(கொற்றவை) மிது 1, வையை மீது 26, மதுரை மீது 4 - என்று 70 பாடல்கள் இருந்தன.
புறநானூறு (புறம்)
தெரியவில்லை
தெரியவில்லை
புறத்திணைப் பாடல்கள்

Thursday, 10 March 2011

திருப்பாவை-ஆண்டாள்

சிற்றம் சிறுகாலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து  நீ
குற்றுஏவல் எங்களைக் கொள்ளாது போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எப்பாவாய்
                                                                                     -ஆண்டாள்

ஆண்டாள்  
தமிழ் நாட்டில் 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார். இவர் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு வைணவ பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார்.

ஆண்டாளின் தோற்றமும் வாழ்க்கையும்

ஒரு குழந்தையாக, ஆண்டாள், துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது, மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்துவந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டாள் பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்த கோயிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கெனக் குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், குழந்தை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். அவர் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை.
இளம் வயதிலேயே சமயம், தமிழ் என்பன தொடர்பில் தனக்குத் தெரிந்த அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை, இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்த பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் பிடித்தவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டாராம். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் இறைவனை ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.
கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தாராம். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்பது கதை.

ஆண்டாள் பாடல்கள்

ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார்.இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமைக்கும், தத்துவம்,பக்தி ஆகியவற்றிக்காக மிகுந்து போற்றப்படுகின்றது.
இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவையில் ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.
இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது.இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது.இது வடமொழியில் எழுதப்பட்ட ஜெயதேவரின் கீத கோவிந்தம் எனும் நூலினை ஒத்ததன்மை உடையதாக காணப்படுகின்றது.
ஆண்டாளின் இவ்விரு படைப்புகளும் தமிழ்நாட்டின் வைணவதலங்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஓதப்படுகின்றது.
திருப்பாவைச் சிறப்பு
வைணவ சமய வழிபாட்டில் ஒன்றறக் கலந்து விட்ட ஒன்று திருப்பாவையாகும். மாதவனாகிய எம்பெருமானுக்கு உகந்த மார்கழி மாதக் காலைகளில் அனைத்து வைணவக் கோயில்களிலும் இசைக்கப்படுவதே இதன் பெரும் சிறப்பு. தமிழில் புனையப்பெற்ற பாடல்களே ஆயினும், தமிழறியா அடியார்கள் கொண்ட வைணவத் தலங்களிலும், மார்கழி மாதக் காலைகளில் திருப்பாவை இசைக்கப்படுவதும், இந்தியாவில் எங்கெல்லாம் பெருமானின் திருக்கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம், கோதை தனக்கும் ஒரு தனிச் சந்நதி கொண்டுள்ளதும் வேறு எந்த ஒரு அடியவருக்கும் காணப் பெறாத தனிச் சிறப்பாகும். மொழி வேறுபாடின்றி, வைகுந்த நாதனின் வழிபாட்டில் இந்தியக் கண்டம் முழுவதும் விரவிக் காணப்படுவது திருப்பாவைத் தொழுகை.
திருப்பாவையின் சிறப்பு முதன்மையாக அதன் பக்திப் பெருக்கு மட்டுமல்ல. பாற்கோவை முழுதும் விரவிக் கிடக்கும் கோதை மாதவன் பாற்கொண்ட தூய காதலமுதம் மற்றும் அதன் விளைவாய் அடியவருக்கும் அனைவருக்கும் அரும்பெரும் வரமாகக் கிடைத்த தமிழ் மணம்.
திருப்பாவையின் இந்த முச்சுவையும் தித்திக்கும் பாக்களில் இரண்டொன்றைக் கீழே காணலாம்:
  • கோதை நமக்கு அளிக்கும் பக்திச் சுவையைக் காணலாம். ஓரே அடிகொண்டு உலகையே அளந்த பரந்தாமனின் புகழைப் பாடுவதனாலேயே புவியோர் தமது துன்பம் நீங்கி இன்புற்றிருக்க இயலும் என இப்பாடலின் மூலம் இயம்புகிறாள் கோதை:
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நான்கள் நம்பாவைக்கு சாற்றுநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்குபெரும் செந்நெல் ஊடு கயலுளக
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்
  • வைணவத் தத்துவ இயற்பின்படி, எம்பெருமானைச் சென்றடைய வழி அவனுடைய திருவடிகளில் சரணாகதியாவதேயாகும். இதனைப் பக்தியாலும் மேற்கொள்ளலாம்; அன்றி கிருஷ்ணப் பிரேமை என்னும் காதலாலும் அடையலாம் என்று சான்றளித்தவள் கோதை. குன்றெடுத்த கோபாலன் ஒருவனே ஆண்மகன்; அவனது அடியார் அனைவரும் அவனது காதலில் கட்டுண்ட பெண்டிரே என்பதே கிருஷணப் பிரேமை. இதனை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது பின்வரும் திருப்பாவை:
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல்
மெத்த பஞ்சசயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா...."
  • வைணவத்தாரோ வேற்று மதத்தினரோ, அன்றி இறை நம்பிக்கை அற்றவரே ஆயினும், கோதையின் தீஞ்சுவைத் தமிழுக்கு அடிமையாகாது இருத்தல் அரிது. திருப்பாவைப் பாடல்கள் அவற்றைப் படிக்கையிலேயே சித்திரப் பண்பு (picturesque quality) பெறுகின்ற பேரானந்தம் அளிப்பவை. இதற்கு எடுத்துக் காட்டாக, மழையைப் பற்றிய இப்பாடலைப் படிக்கையில், வானின்றும் மண்ணில் வீழும் மழையை நேராகவே காண்பது போன்ற ஒரு அனுபவம் பெறலாம்:
ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழிய்அம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்றுஅதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
             (நன்றி:விக்கிபீடியா கற்றற்ற கலைக்களஞ்சியம்)

இணையத்தமிழின் நிறைகளும் குறைகளும் -வே.மணிகண்டன்

10.03.2011அன்று பகல் 02.00 மணி முதல் 03.00 மணிவரை நடைப்பெற்ற தமிழ் இலக்கிய மன்றத்தில் உதவிப்பேராசிரியர் .திரு.வே.மணிகண்டன்  அவர்கள் இணையத்தமிழின் நிறைகளும்குறைகளும் எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வழங்கினார்.

     இணையத்தமிழின் நிறைகளும் - குறைகளும்

இணையம் மனித இனத்தின் முதல் பன்மொழி ஊடகம். இது எண்ணற்ற கலாச்சாரங்களுக்கான பாலமாக விளங்குகிறது. பல புதிய உறவுகளை எதிர்பாராதவர்களின் மத்தியில் உருவாக்குகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மக்களில் குறிப்பிட்ட வி~யங்களில் ஒற்றுமை உடையவர்களை இணைக்கும் தலைசிறந்த ஊடகமாக இணையம் திகழ்கிறது. இணையம் உலகைப் பற்றிய செய்திகளையும் படைப்புகளையும் தருவதோடு தன் சேவையை நிறுத்திக் கொள்வதில்லை. மேலும் உலகை மனிதன் எப்படிப் பார்க்க வேண்டும், எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? எவை முக்கியத்துவம் வாய்ந்தவை? எவை முக்கியத்துவம் அற்றவை? என்பதையெல்லாம் தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக விளங்குகிறது.
மனிதன் எழுத்து வழித்தகவல் தொடர்பு கொண்ட வரலாறு பல ஆயிரம் ஆண்டுகள் பழமை உடையது. ஆயினும் தகவல் தொடர்பின் அசுரப்பயணம் கூட்டன் பர்கின் அச்சுப்பொறி புரட்சிக்குப் பிறகே, தொடங்குகிறது. எல்லா மொழிக்கும் கிடைக்கும் பதிவு சாதனமாக இணையம் திகழ்கிறது.
தமிழ், இனம் சார்ந்து பேசப்படுகின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் இதுவும் ஒன்று. உலக நாடுகளில் பெரும்பாலான நாடுகளில் தமிழர்களால் மட்டுமே பேசப்படுகின்ற மொழி. ஆங்கிலம், ஸ்பானி~; போல தமிழ் பன்னாட்டுத் தகவல் ஊடகமல்ல, ஏன் தமிழ் மொழி தமிழ் நாட்டிலேயே அலுவக மொழி அல்ல. பிறமொழி வார்த்தைகளின் கலப்பு தமிழைக் கொஞ்சம் கொஞ்சமாக கரைத்துக் கொண்டு இருக்கிறது. தமிழைப் போன்ற பல மொழிகள் கூடிய விரைவில் அழிந்துப் போய்விடும் என சிலர் குறி சொல்கிறார்கள். தமிழ் வருங்கால தலைமுறையினரால் கைவிடப்பட்டு பொருண்மிய வாழ்க்கைக்கு ஆங்கிலம், கலாச்சாரத்துக்குத் தமிங்கிலம் என சூழல் மாற்றம் ஏற்படும் என கூறப்பட்டது. ஆனால் இவ்வாறெல்லாம் பேசிய மூடர்களின் கருத்தைத் தமிழினமும், இணையமும் சேர்ந்து புரட்டிப் போட்டது. ஆம் இன்று இணையத்தில் இருநூற்றிற்கும் மேற்பட்ட தமிழ் இணைய தளங்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட வலைப்பதிவுகளையும், கோடிக்கும் மேற்பட்ட வாசகர்களையும் தமிழ் பெற்றுள்ளது. இணைய தமிழை மேலும் தெரிந்து கொள்ள இணைய தமிழின் நிறைகளையும், குறைகளையும் இக்கட்டுரை ஆராய்கிறது.
தமிழின் முதல் வலையேற்றம்;:
தமிழையும் ஆட்சி மொழியாகக் கொண்ட சிங்கையில் தேசியப் பல்கலைக் கழகத்தின் ஐவெநசநெவ சுநளநயசஉh யனெ னுநஎநடழிஅநவெ ருnவை ஐசுனுரு உடன் ஊநவெசந கழச ஐவெநசநெவ சுநளநயசஉh இணைந்து தமிழ் இணையத்திற்கான அடிப்படை ஆராய்ச்சிகளைத் தொடங்கியது. சிங்கையின் பிரபல எழுத்தாளரும், தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியராகவும் மேலும் கணியன் எனும் மென்பொருள் மற்றும் வலையகத்தின் வாயிலாக உலகத் தமிழர் மத்தியில் மாபெரும் புகழ் பெற்ற நா. கோவிந்த சாமி தான் தமிழின் முதல் வலைப்பக்கத்தை வடிவமைத்தவர்.
அக்டோபர் 1995 இல் சிங்கப்பூர் அதிபர் திரு ஓங்டாங் சாங் தொடங்கி வைத்த துழரசநெல றுழசனள ர்ழஅந யனெ யேவழைn யுவொழடழபல ழக ளுiபெயிழசந Pழநவசல (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில் தான் முதன் முதலில் இணையத்தில் தமிழ் பிரவேசம் செய்தது.
இணையத்தமிழின் நிறைகள்;:-
இணையத்தில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக பயன்படுத்தப்படும் மொழியாக தமிழ் குறுகிய காலத்தில் மாபெரும் வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது.
தமிழில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைய தளங்களின் வரவால் இணையத்தமிழ் பலகோடி வாசகர்களை தன்னகத்தே பெற்றுள்ளது.
தமிழில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள மின்னஞ்சல் வசதியும், உடனுக்குடன் கருத்துப் பரிமாற்றம் பெற அரட்டை வசதியும் பெரும்பாலான தமிழ் இணைய தளங்கள் பெற்றுள்ளன. இச்சிறப்புத் தன்மை பொருந்திய வசதிகளால், நம்நாட்டில் மட்டுமல்லாமல், பிற நாடுகளில் உள்ள நண்பர்களுடனும், இலக்கியவாதிகளுடனும், படைப்பாளர்களுடனும் உடனுக்குடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வழிவகை செய்கிறது.
தமிழ் இணைய தளங்களில் சில தளங்கள் நூலகத்தையும் ஒரு பகுதியாக கொண்டுள்ளன. நமக்குத் தேவையான நூல்கள் இந்த இணைய தள நூலகத்தில் இருக்குமானால் அவற்றை நாம் படிப்பதோடு மட்டுமல்லாமல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
படைப்பாளர்கள் தங்களுடைய படைப்புகளை இணையத்தில் வெளியிடுவதனால் உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் நம்முடைய படைப்புகளைச் சென்று சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் வாசகர் மற்றும் திறனாய்வாளர்களின் கருத்துக்களைப் படைப்பாளர்கள் பெருகின்றனர். இதனால் இருவழிப் பரிமாற்றம் (படைப்பாளர்-வாசகர்) நடைபெறுகிறது.
இணைய தளங்களில் தனி நபர்களால் உருவாக்கப்படும் தமிழ்வலைப்பதிவுகள் மிகுந்த வரவேற்பையும், படைப்பு ரீதியில் மாபெரும் செல்வாக்கையும் செலுத்துகின்றன. இவை தனியொரு மனிதனால் உருவாக்கப்படுவதால் அவருடைய படைப்புக்கள் எவ்வித திருத்தமோ, வழிகாட்டுதலோ தேர்ந்தடுத்தலோ அல்லாது நடுவரின் எழுத்து பொதுவாசிப்புக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. மேலும் மாதத்திற்கு மூன்று முறை பெரும்பாலான வலைப்பதிவுகள புதுப்பிக்கப்படுகின்றன. இவ்வலைப்பதிவுகளில் படைப்புகளும், விமர்சனங்களும் அதிக அளவில் வலையேற்றம் செய்யப்படுகின்றன.
இணையத்தில் தமிழ்த் தேடுதளங்களின் வரவால் நமக்குத் தேவையான தகவல்களை எளிதில் பெறலாம். இவற்றில் தமிழ் இலக்கியம் மட்டுமல்லாது தமிழ்ச் சமூகம் சார்ந்த அனைத்து தேடுதல்களுக்கும் பெரும்பாலும் தரவுகள் கிடைக்கின்றன. தோசை, மாமா, முரசு ஆகிய தேடுகளங்கள் பயனுள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தமிழ் எழுத்துருக்கள பல தமிழ் இணைய தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்து நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தற்பொழுது பல இணைய தளங்கள் யூனிகோடு (தன்னியலாக இயங்கும் எழுத்துரு) வசதியைப் பெற்று எந்த இணையத்திலும் தமிழைக்காணும் வாய்ப்பை பெற்றிருக்கின்றன.
தமிழ் யூனிகோடு எனும் உலகில் எழுத்து வழக்கில் உள்ள மொழிகள் எல்லாவற்றிற்கும் எழுத்துரு, குறியீடுகள் வரையறுக்கும் அமைப்பில் தமிழும் இணைக்கப்பட்டு குறியீட்டுப் பகுதியில் போதுமான இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த யூனிகோடினை தமிழ் இணைய தளங்கள் பல பயன்படுத்துவதால் எல்லாவித எழுத்துருக்களும் பன்மொழி உள்ளடக்கிய ஒரே எழுத்துருவாக பாவிக்க உதவுகிறது.
உலகில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் கருத்துப் பரிமாற்றத்திற்கும், நட்புறவிற்கும், உசாவுதலுக்கும் இணையம் பெரும்பணியைச் செய்கின்றது.
இணையத்தமிழின் குறைகள்;:-
இணையத்தில் ஆங்கிலத்திற்கு அடுத்தப்படியாக தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டாலும், ஒவ்வொரு தமிழ் இணைய தளங்களும் வௌ;வேறு தமிழ் எழுத்துருக்களைப் பெற்றிருப்பதால் அவ்வெழுத்துருக்கள் கணிணியில் இருந்தால் மட்டுமே அந்த இணையத் தளங்களை நாம் பார்வையிட முடியும். இந்த சிக்கலுக்குத் தீர்வாக யூனிக்கோடு எனும் முறை இருப்பினும் அதைப் பெரும்பாலான இணைய தளங்களில் அந்த மென்பொருள் தரவிறக்கம் செய்யப்படாததால் நம்பகத் தன்மையற்ற எழுத்துருக்களால் இணைய தமிழ் வளர்ச்சி தடைபட்டுள்ளது.
தமிழில் மின்னஞ்சல், அரட்டை ஆகிய வசதிகள் இருப்பினும், தமிழர்களே அவற்றைப் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. ஆங்கில மோகத்தால் ஆங்கிலத்தையே பயன்படுத்துகின்றனர். மேலும், ஆங்கில எழுத்துருக்கள் தோன்றுகின்றன ஆனால் நாம் தமிழில் அனுப்பும் தகவலானது அனுப்பும் தகவலின் எழுத்துரு இல்லாத கணிணியில் தமிழ் எழுத்துக்கள், தமிழ் வரி வடிவங்களாக தெரிவதில்லை. மாறாகச் சிறிய, சிறிய கட்டங்களாகவோ, வட்டங்களாகவோ தெரிகின்றன.
இணையத்தில் ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட தளங்களைப் பெற்றிருந்தாலும் அவற்றில் பெரும்பாலான இணைய தளங்களில் அடிக்கடித் தகவல்கள் புதுபிக்கப்படுவதில்லை. பல மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது துவங்கிய நிலையிலேயே இத்தளங்கள் இணையத்தில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
தமிழ் இணைய தளங்களில் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டுள்ள நூலகத்தில் குறைந்த அளவிலேயே புத்தகங்கள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல இணையத்தளங்களில் நூலகம் என்ற பெயரைத் தாங்கியபடி வெற்றிடப் பக்கங்கள் உள்ளன.
இணையத்தில் தமிழ் வலைப்பதிவுகளின் வருகையால் தனிநபர்களின் படைப்புகள் எவ்விதத்தடையும், திருத்தமும் இல்லாமல் தரயேற்றம் செய்யப்பட்டு மொழிக்கு வளமை அளித்தாலும், அதிக அளவில் தரவில்லாத படைப்புகள் வெளியிடப்படுவது மிகப்பெரிய குறையாக இணையத்தமிழ் வளர்ச்சியில் முன் நிற்கிறது.
தமிழ் இணையத் தேடு தளங்கள் முழுமையான தரவுகளைப் பெற்றில்லாததால் உலாவிகள் தேடும் தரவுகளை சரிவரப் பெறமுடிவதில்லை.
யூனிக்கோடு எனும் தன்னியலாக இயங்கும் எழுத்துருவை இணையத்தளங்கள் பல பெற்றில்லாதது இணையத் தமிழ் வளர்ச்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது.
இணையத்தில் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட இணைய தளங்கள், இணைய வலைப்பதிவுகள், தேடுதளங்கள் இடம் பெற்றிருந்தாலும் இணையதள முகவரிகளை ஆங்கிலத்தில் அழுத்திகளால் தட்டச்சு செய்தால் தான் நாம் தமிழைக் காணக்கூடிய நிலை இருக்கிறது.
விசை பலகைகள தமிழில் இல்லாது ஆங்கிலத்தில் கணிணியில் இருப்பது, தமிழில் விசைப் பலகைகளை அறிமுகம் செய்து, அதை பரவல்படுத்தபடாதது ஆகியவை இணைய தமிழின் வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
தமிழ் ஆர்வம், தமிழ்ப்பற்று போன்றவை இணையத் தமிழ் நோக்கிய பயணத்தில் முதல்படி, இன்று நாம் பார்க்கும் இணையத் தமிழ் வளர்ச்சியில் பங்கேற்றவர்களைப் பின்னிப் பிணைக்கும் ஓர் இழையாக இருப்பது தமிழ்பற்றுதான் ஆனால் அதைத்தான்டிச் சென்று, மொழியின் அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொண்டு, மக்களின் தகவல் மற்றும் தொடர்பாட்டுத் தேவைகளின் அடிப்படையில் மென்பொருள் இயற்றுவது மிக முக்கியம்.

manisen37@yahoo.com

Copyrightthinnai.com